மாணவர் முழக்கம் 2021 - பேரா மாநிலத்தில் 24 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்


மாணவர் முழக்கம் 2021 காலிறுதி சுற்றுக்குப் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 24 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மலேசியாவில் மட்டுமல்லாது அனைத்துலக நிலையிலும் புகழ்பெற்ற பேச்சுப் போட்டியான மாணவர் முழக்கம் 2021 தகுதிச் சுற்று நடந்து முடிந்துள்ளது. இதில், அதிக எண்ணிக்கையில் பேரா மாநிலத்தின் மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

10ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் மாணவர் முழக்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே பேச்சாற்றலை உருவாக்குவதில் தனி முத்திரைப் பதித்த ஒரு போட்டியாகும். வணக்கம் மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன்  இப்போட்டி நடைபெறுகிறது.

தகுதிச் சுற்றில் போட்டியாளர்கள் பேசி  காணொலியாகப் பதிவுசெய்து  போட்டிக்கு அனுப்பி வைத்தனர். அதிலிருந்து நடுவர் குழுவினர் சிறந்த 120 மாணவர்களைக்  காலிறுதி சுற்றுக்குத் தெரிவுசெய்துள்ளனர்.

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 24 மாணவர்கள் மாணவர் முழக்கம் 2021 காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

மாணவர் முழக்கம் 2021 காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள மாணவர்களின் விவரங்களைக் பின்வரும் அட்டவணையில் காணலாம்.



இவ்வாண்டில்  பேரா மாநிலத்திலிருந்து ஏறக்குறைய 70 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். 

மாணவர் முழக்கம் 2021 காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி 'வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம் என்பதை நிரூபித்துள்ள நமது 24 மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்குப் பாராட்டும் நல்வாழ்த்தும் உரித்தாகட்டும். அதோடு, மாணவர்களின் வெற்றிக்காகப் பின்னணியில் உழைத்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் உதவியிருக்கும் பெற்றோர்களுக்கு நன்றிகலந்த பாராட்டுகள். மேலும், மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வழிகாட்டிய தலைமையாசிரியர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

Comments

Popular Posts:-

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

IPITEx2020 BANGKOK - பேரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #12 : புதிய இயல்பு : கோவிட் -19 கற்றல் கற்பித்தலை எவ்வாறு வடிவமைக்கின்றது

SJK(T) SITHAMBARAM PILLAI - 1 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலத்தோடு சிறப்பு விருதும் வென்று சாதனை

WEBINAR / வலையரங்கம் #14 : தமிழ்க் கலைச்சொல் உருவாக்கக் கலையும் வழிமுறைகளும்