SJK(T) LDG.KAMATCHY - [கோவிட் 19] நாடும் மக்களும் நலம்பெற இறை வேண்டுகை

கடந்த 01.06.2021 இரவு 7.30 முதல் 7.45 வரை பேரா, பாகான் டத்தோ மாவட்டம், தேசிய வகை காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் "மலேசியாவிற்குப் பிரார்த்திப்போம்" என்ற இறை வேண்டுகை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  இக்கூட்டுப் பிரார்த்தனையில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பாதுகாவலர், தோட்டக்காரர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.


இன்றையக் கால கட்டத்தில் உலக நாடுகள் மட்டுமின்றி நம் நாடும் கோவிட் -19 என்ற கிருமியின் கொடூரத் தாக்குதலில்  சிக்குண்டு அல்லல் படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. நாளுக்கு நாள் இக்கிருமியின் தாக்குதல் பயங்கர வேகத்தில் பரவி மரண எண்ணிக்கையையும் கிடுகிடுவென உயர்த்திக் கொண்டே வருகின்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை பல உயிர்கள் இத்தாக்குதலின் காரணமாகப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.



இந்நிலையை மாற்றியமைக்கும் ஆற்றல் எத்திசையிலும் எல்லையில்லாமல் நீக்கமற நிறைந்துள்ள இறையருளுக்கே உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு  நம் நாடு இக்கிருமியின் கோரப்பிடியிலிருந்து விடுபட்டு மேன்மையடைய வேண்டும் என்பதையும் கிருமியின் தாக்குதலுக்கு ஆளான மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது




காணொலி இணைப்பு


Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

18ஆம் ஆண்டு வளர்தமிழ் விழா (பேரா மாநில நிலை)

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

தேசிய நிலை செந்தமிழ் விழா 2019