SJK(T) LDG BANOPDANE - சிறந்த கருவள நடுவத்திற்கான முதல் பரிசு வென்று சாதனை

பேரா, பத்தாங் பாடாங் மாவட்டம், பனோப்டேன் தமிழ்ப்பள்ளி மாவட்டத்திலேயே சிறந்த கருவள நடுவத்திற்கான முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளது. குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிப் பிரிவில் பனோப்டேன் தமிழ்ப்பள்ளி இந்த வெற்றியைக் கண்டுள்ளது.

SJK(T) Ldg.Banopdane, Daerah Batang Padang, Perak menang anugerah Johan sebagai Pusat Sumber Terbaik Kategori Sekolah Kurang Murid peringkat Daerah Batang Padang.

தொடக்கத்தில் இப்பள்ளியின் கருவள நடுவம் ஒரு குறுகிய அளவே கொண்டிருந்தது. இரண்டு பெரிய மேசைகள் மற்றும் மாணவர்கள் படிப்பதற்கான நாற்காலிகள் மட்டுமே இருந்தன. 2019 ஆம் ஆண்டு தொடங்கி இப்பள்ளி பல்வேறு உருமாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டு வருகின்றது.

தலைமை ஆசிரியர் திரு.சரவணன் இராஜன் நாயுடு அவர்களின் தலைமைத்துவத்தில் இப்பள்ளியின் கருவள நடுவம் 21ஆம் நூற்றாண்டுக் கல்விக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது. ‘தட்சிணாமூர்த்தி கருவள நடுவம்’ எனவும் பெயரிடப்பட்டது. 

திறமையான தலைமைத்துவம், அன்பான அணுகுமுறை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்பான முயற்சியால் 2019ஆம் ஆண்டு இப்பள்ளியின் நூலகம் மாவட்டத்தில் குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளியின் சிறந்த கருவள நடுவமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே ஆண்டில் பேரா மாநில நிலையில் 3ஆம் நிலையிலும் வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 2020ஆம் ஆண்டிலும் மீண்டும் மாவட்டத்தில் குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளியின் சிறந்த கருவள நடுவமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் முதல் நிலையில் வெற்றிபெற்றுள்ளது.

தொடர்ந்து 3 ஆண்டுகளாகச் சிறந்த கருவள நடுவத்திற்கான முதல் பரிசை இந்தப் பள்ளி தக்கவைத்து வருவது மிகவும் பாராட்டுக்கு உரியது. இந்த வெற்றிக்குப் பின்னணியில் உழைத்துள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ள பெற்றோர்கள் மற்றும் தனிநபர்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதாகத் தலைமை ஆசிரியர் திரு.சரவணன் இராஜன் நாயுடு தெரிவித்தார்.

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

i-EIE 2019 புத்தாக்கப் போட்டியில் பேரா தமிழ்ப்பள்ளிகள் சாதனை