அறிவியல் விழா 2020 - தென்பேரா ஆசிரியர்களுக்கான பட்டறை
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழா இந்த ஆண்டிலும் தொடரவுள்ளது. தென் பேரா வட்டார ஆசிரியர்களுக்கான அறிவியல் விழா விளக்கமளிப்பு மற்றும் பட்டறை 04.03.2020 புதன்கிழமை பிற்பகல் மணி 2:00 - 5:00 வரையில் நடைபெற்றது.
சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியில் நடந்த இந்தப்
பட்டறையில் தென்பேரா வட்டாரத்தைச் சேர்ந்த மொத்தம் 26 தமிழ்ப்பள்ளிகள்
கலந்துகொண்டன.
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் சுப.சற்குணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டறையைத் தொடக்கி வைத்தார். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வெற்றிகளும் சாதனைகளும் மென்மேலும் தொடர வேண்டும். அதற்காக, ஆசிரியர்கள் மனம்தளாரமல் தொடர்ந்து மாணவர்களைப் பயிற்றுக்க வேண்டும்; ஊக்கமளித்து உருவாக்க வேண்டும் எனத் தமதுரையில் தெரிவித்தார்.
அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க இயக்கத்தின் தலைவர் முனைவர் முகம்மது
யூனூஸ் யாசின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பான முறையில் பட்டறையை
வழிநடத்தினார். சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் பழனி சுப்பையா நிகழ்ச்சியில் உடன் கலந்துகொண்டார். பேரா மாநில அறிவியல் விழா ஒருங்கிணைப்பாளர் சிவபாலன் நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றினார்.
Comments
Post a Comment