SJK(T) LDG SUNGAI SAMAK - MSSD 2020 திடல்தடப் போட்டியில் சாதனை

பாகான் டத்தோ மாவட்ட நிலை திடல்தடப் போட்டியில் [KEJOHANAN MSSD BAGAN DATUK] சுங்கை சாமாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஒட்டுமொத்த வெற்றியாளருக்கான மூன்றாவது பரிசை வெற்றிபெற்றது.

SJK(T) LDG.SUNGAI SAMAK, DAERAH BAGAN DATUK MENANG TEMPAT KE-3 KESELURUHAN DALAM KEJOHANAN MSSD TAHUN 2020

கடந்த மார்ச்சு 2-5, 2020இல் இந்த மாவட்ட நிலை போட்டி சாபாக் பெர்னாம் விளையாட்டரங்கத்தில் நடந்தது. பாகான் டத்தோ மாவட்டதைச் சேர்ந்த தேசிய, சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் இப்போட்டியில் கலந்துகொண்டன.


சுங்கை சாமாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 3 தங்கம் 2 வெள்ளி 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் 3-ஆவது இடத்தைப் [TEMPAT KE-3 KESELURUHAN] பிடித்தது. இப்பள்ளியின் நிகராளியாக 9 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.



வெற்றி மாணவர்கள் விவரம்:-

1.அலீனா – தங்கப் பதக்கம் 
[குண்டெறிதல் பெ12]
2.தமயந்தி – தங்கப் பதக்கம் 
[நீளம் தாண்டுதல் பெ12]
3.அர்வின் ராவ் – தங்கப் பதக்கம் 
[நீளம் தாண்டுதல் ஆ10]
4.வெள்ளிப் பதக்கம்
அஞ்சலோட்டம் 4X100மீ பெ12
5.வெள்ளிப் பதக்கம்
 அஞ்சலோட்டம் 4X200மீ பெ12
6.அஸ்வினி – வெண்கலப் பதக்கம் 
[100மீ / 200மீ பெ12]
7.அனுஷா – வெண்கலப் பதக்கம் 
[நீளம் தாண்டுதல் பெ12]







சுங்கை சாமாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மொத்தம் 32 மாணவர்கள் பயில்கின்றனர். குறைந்த மாணவர் கொண்ட பள்ளியாக இருந்தாலும் மாவட்ட நிலையில் 3-ஆவது இடத்தைப் பிடித்திருப்பது மிகச் சிறப்பான சாதனை என்றால் மிகையில்லை. இந்த வெற்றியின் பின்னணியில் இருந்து பணியாற்றிய பள்ளியின் இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் பிங்கலன் கஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். 




சிறு பள்ளியும் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்பதை மெய்ப்பித்துள்ள சுங்கை சாமாக் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் தலைமையாசிரியர் மணிமேகன் கோவிந்தராஜு அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை