SJK(T) SAINT MARY'S - 40 கல்வியாளர்கள் சிறப்பு வருகை மேற்கொண்டனர்
காணொலி இணைப்பு ⏭
கிரியான் மாவட்டம், பாரிட் புந்தார், செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் அண்மையில் கருப்பொருள் அடிப்படையில் வகுப்பறை உருமாற்றத்
திட்டம் நிகழ்ந்தது. பேரா மாநிலக் கல்வி இயக்குநர் முனைவர் முகமது சுகைமி பின் முகமது
அலி அவர்கள் இப்பள்ளியில் 12 உருமாற்ற வகுப்பறைகளையும் அதிகாரப்படியாகத் திறந்து வைத்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
04.03.2020 புதன்கிழமை செயிண்மேரியின் உருமாற்ற வகுப்பறைகளை
நேரில் காண்பதற்கு 40 பேர் அடங்கிய கல்வியாளர் குழுவினர் வந்தனர். கிரியான் மாவட்டத்
தலைமைக் கல்வி அதிகாரி ஹாஜா செப்பியா இந்த அடைவுக் குறியீட்டுப் பயணத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
கெடா, ஜித்ரா அமினுடின் பாக்கி கல்விக் கழகத்தைச் [INSTITUT AMINUDIN
BAKI, JITRA, KEDAH] சேர்ந்த விரிவுரைஞர்கள் மற்றும் அங்கு பயிற்சி பெற்றுவரும் குழுவம் 5
உருமாற்றுப் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் [PENGETUA DAN GURU BESAR TS25 KOHORT 5], மாவட்டக் கல்வி அதிகாரிகள்
ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
செயிண்மேரி தமிழ்ப்பள்ளியின் வகுப்பறை உருமாற்றம் மிகவும் வியப்பூட்டுவதாக அவர்கள்
தெரிவித்தனர். தங்கள் பள்ளிகளை உருமாற்றம் செய்வதற்கு இதுவொரு நல்ல தன்முனைப்பாக அமைவதாகக்
கூறி அனைவரும் தலைமையாசிரியர் இரா.சுப்பிரமணியம் அவர்களை மனதாரப் பாராட்டினர். இப்படியொரு
பள்ளி கிரியான் மாவட்டத்தில் உருவாகி இருப்பது பெருமை அளிப்பதாக மாவட்டத் தலைமைக் கல்வி
அதிகாரி குறிப்பிட்டார்.
Comments
Post a Comment