SJK(TAMIL) PERAK SANGEETHA SABAH : விளையாட்டுப் போட்டி விழா 2019
பழமை வாய்ந்த கட்டடத்திலிருந்து புதிய கட்டடத்தில் இடம் மாற்றம் கண்ட பேரா சங்கீத தமிழ்ப்பள்ளிக்கூடம் திடல் வசதிக்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல வசதிகள் கொண்டப் பள்ளியாக உருமாறி வருகிறது. ஆனால் திடல் இல்லா குறை நிலவி வருகிறது.
பள்ளியின் 65ஆவது ஆண்டு திடல் தடப்போட்டியை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவசுப்பிரமணியம் இந்த திடல் விவகாரம் குறித்துத் பேசினார்.
இப்பள்ளிக கூடம் அருகில் கேடிஎம்மிற்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஏற்கனவே பலமுறை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது.
Comments
Post a Comment