SJK(TAMIL) MENGLEMBU : மகிழம்பூ தமிழ்ப்பள்ளிக்கூட புதிய கட்டடத்திற்கு சிவநேசன், சிவகுமார் நிதி வழங்கினர்
இங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் மகிழம்பூ தமிழ்ப்பள்ளில் நிர்மாணிக்கப்பட்டு வந்த புதிய கட்டட நிதிக்கு அறிவித்தபடி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் வெ. 50,000 மற்றும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் வெ. 20,000 வழங்கினர்.
இப்பள்ளிக் கூடம் வெ.35,000 செலவில் நிர்மாணிக்கப்பட்டு வந்தது.
அதன் நிர்மாணிப்பு பணி நிதிப் பிரச்சனையால் திட்டமிட்டப்படி நிறைவு செய்ய இயலாத காரணத்தால் பள்ளி நிர்வாகம் நிதி கோரிக்கையை முன் வைத்தது.
இப்பள்ளிக்கு வருகை புரிந்த மேல் குறிப்பிட்ட இருவரும் செய்த நிதி அறிவிப்பை இன்று ஒப்படைத்தனர்.
Comments
Post a Comment