தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி நாள் – விமரிசையானக் கொண்டாட்டங்கள்
பிப்ரவரி 21ஆம் நாள் அனைத்துலகத் தாய்மொழி நாளாக உலக மக்களால் கொண்டாடப்படுகிறது. அவரவர் தாய்மொழியை உணர்ந்து பற்றையும் உணர்வையும் வளர்த்துக் கொள்ள தாய்மொழி நாள் வழிவகுக்கிறது எனலாம்.
அந்தவகையில் பல்வேறு அமைப்புகள் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. தமிழ்ப்பள்ளிகளும் இந்தத் தாய்மொழி நாளை முன்னிட்டு விழாக்களை நடத்தியுள்ளன.
மாணவர் மனங்களில் தாய்மொழி மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தி மொழிப்பற்றை விதைக்கும் நோக்கில் பல பள்ளிகளில் விழா எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பேராக் மாநிலத்தில் அதிகமான பள்ளிகளில் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பேராக் மாநிலத்தில் முதன் முறையாக 56 பள்ளிகளில் தாய்மொழி நாள் நடந்துள்ள வேளையில் இவ்வாண்டில் 70 தமிழ்ப்பள்ளிகளில் விழா எடுக்கப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் தெரிவித்தார்.
Comments
Post a Comment