கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் புத்தாக்கச் சாதனை

பேரா , கிரியான் மாவட்டத்தில் புத்தாக்க ஆசிரியருக்கான போட்டி (PERTANDINGAN GURU INOVATIF 2018) நடைபெற்றது . இந்தப் போட்டியில் கிரியான் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு குழு முறையில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளனர் . வெற்றிபெற்ற ஆசிரியர்களும் அவர்களின் தலைமையாசிரியர்களும் மே 30 & 31 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்தப் புத்தாக்க ஆசிரியருக்கான போட்டியில் ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி , சுங்கை போகா தமிழ்ப்பள்ளி மற்றும் களும்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்களின் புத்தாக்கத்தைக் காட்சிப்படுத்தினர் . மெதுபயில் மாணவர்களுகான ‘ மகிழறிவியல் ’ எனும் விளையாட்டு உத்தியினை அறிவியல் பாடத்தில் பயன்படுத்தி ஆறுமுகம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களான குமாரி . பரிமளம் பலராமன் , குமாரி துர்கா தேவி சவுந்தர ராஜன் , திரு . பிரகலாதன் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டைப் பெற்றனர் . இந்த உத்தி முறையின் வழி அறிவியல் பாடத்தில் மெது பயில் மாணவர்களின் ஆர்வத்தை த் தூண்டுவதுடன...