தேசியத் தமிழாசிரியர் திலகம் - பேரா ஆசிரியர்கள் மூவர் விருது பெற்றனர்
நாள் : 2 நவம்பர் 2017
தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர்
ச.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மலேசியத் துணைக்
கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன், தமிழகத்தின் தமிழக பள்ளிக் கல்வி மற்றும்
விளையாட்டு அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் விருது பெற்றனர். அவர்களுக்குப் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
Comments
Post a Comment