SJK(T) KERUH - 2021ஆம் ஆண்டுத் திட்டங்களும் சாதனைக் கதைகளும்

பேரா மாநிலம், மேல்பேரா மாவட்டத்தில் அமைந்துள்ளது குரோ தமிழ்ப்பள்ளி, கல்வி, இணைப்பாடம், மாணவர் உருவாக்கம், ஆசிரியர் மேம்பாடு என இப்பள்ளி பல வகையிலும் சிறப்புக்குரிய ஒரு பள்ளியாகத் திகழ்கின்றது.

Aktiviti & Pencapaian SJK(T) Keruh Tahun 2021

கொரோனா கோரணி நச்சில் பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த போதிலும் இயங்கலை வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகளும், செயல் நடவடிக்கைகளும் இப்பள்ளியில் நடைபெற்றுள்ளன. மாறுபட்ட கோணத்தில் மாணவர்களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள்.

தவிர, மாநில, தேசிய, அனைத்துலக நிலைகளில் இயங்கலை வாயிலாக நடந்த பல போட்டிகளில் கலந்துகொண்டு இப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் சிறந்த வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது, குரோ தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் உயரிய விருதுகளை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்ந்துள்ளனர்.

இப்பள்ளியின் முதுகெலும்பாக இருந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் நன்முறையில் வழிநடத்தி வெற்றிகளைக் குவித்துவரும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி செல்வராணி அவர்கள் வெகுவாகப் பாராட்டலாம்.

தலைமையாசிரியர் திருமதி மு.செல்வராணி

அதேபோல, முழுத் திறமையோடும் அக்கறையோடும் பணியாற்றும் இப்பள்ளியின் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்.

2021ஆம் ஆண்டில் குரோ தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், செயல்திட்டங்கள் மற்றும் சாதனைக் கதைகளைக் கீழே உள்ள மின்னூலில் காணலாம்.

Click To View Flipbook / படத்தைச் சொடுக்கவும்

குரோ தமிழ்ப்பள்ளியில் மாணவர் உருவாக்கப் பணிகள் மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துவோமாக!

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

SJK(TAMIL) TUN SAMBANTHAN, BIDOR - ஜொகூர் ஆசிரியர்களின் அடைவுக் குறியீட்டுப் பயணம்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG CASHWOOD - இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு 2019

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்