SJK(T) KERUH - ஆசிரியை செல்வி.சீதாலட்சுமிக்கு அனைத்துலக கட்டுரைப் படைப்பாளர் விருது

கனடாவில் நடைபெற்ற 5th International Invention Innovation Competition In Canada ( iCAN 2020) எனும் அனைத்துலக புத்தாக்கப் போட்டியின் சிறந்த புத்தாக்கக் கட்டுரைப் படைப்பாளர் விருது ஆசிரியை செல்வி சீதாலட்சுமிக்கு வழங்கப்பட்டது.

Cikgu Cik.Cheetalakchumy Balu, Guru SJK(T) Keruh, Daerah Hulu Perak, Perak dianugerahkan Sijil Kepujian untuk Penulisan Ilmiah Inovasi dalam 5th International Invention Innovation Competition In Canada (iCAN 2020)

இவருடைய புத்தாக்கக் கட்டுரை தெரிவு செய்யப்பட்டு போட்டியின் வெற்றியாளர் ( Award Winner of iCAN 2020 ) எனும் சிறப்பு விருதினை வாகைச் சூடியுள்ளார். 

ஆசிரியை செல்வி சீதாலட்சுமி பாலு பேரா, குரோ தமிழ்ப்பள்ளியில் பணியாற்றும் இளம் ஆசிரியராவார். இவர் தமது தந்தையார் திரு. பாலு மாணிக்கம் அவர்களுடன் இணைந்து இந்த கட்டுரைப் படைப்பினை இயங்கலை மூலம் படைத்துள்ளார். அவருடைய தந்தையாரும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்களின் தனித்துவமான கட்டுரைப் படைப்பினைப் பாராட்டி ஏற்பாட்டுக் குழு சிறப்பாக இந்த விருதினை வழங்கியதோடு மட்டுமல்லாமல் சிறந்த கட்டுரை படைப்பிற்கான நற்சான்றிதழையும் ( Certificate of Appreciation for Excellent Presentation Of Innovation Project Paper) இவர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த மாபெரும் வெற்றியின் மூலமாக ஆசிரியை செல்வி சீதாலட்சுமி பாலு தமது பள்ளிக்கு மட்டுமின்றி பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கே பெருமை சேர்ந்துள்ளார் என்றால் மிகையாகாது.

Comments

  1. வாழ்த்துகளும் பாராட்டுக்களும்

    ReplyDelete

Post a Comment

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை