மாணவர் முழக்கம் 2021 - பேரா மாநிலத்தில் 5 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்


மாணவர் முழக்கம் 2021 போட்டியில்  பேரா மாநிலத்தின் 5 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மாணவர் முழக்கம் அனைத்துலகப் போட்டிக்கு மலேசியாவின் நிகராளிகளைத் தேடும் இந்தப் பயணத்தில் பேராவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இணைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

மாணவர் முழக்கம் 2021இல் தற்போது காலிறுதிச் சுற்றுகள் 4 மண்டல வாரியாக நடைபெறுகின்றன. 14.09.2021ஆம் நாள் நடந்த பேரா மற்றும் பகாங் மண்டலத்திற்கான காலிறுதிச் சுற்றில் 32 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் 6 மாணவர்கள் மிகவும் சிறப்பாகப் பேசி அதிக புள்ளிகளைப் பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்ற வேளையில் 5 மாணவர்கள் பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதிச் சுற்றுகுத் தகுதிபெற்றுள்ள பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி வெற்றியாளர் விவரங்களைக் கீழே காணலாம்.







இவ்வாண்டில்  பேரா மாநிலத்திலிருந்து ஏறக்குறைய 70 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். ஏற்கனவே நடந்து முடிந்த தகுதிச் சுற்றில் 24 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்.

தற்போது அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி 'வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம் என்பதை நிரூபித்துள்ள நமது 5 மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்குப் பாராட்டும் நல்வாழ்த்தும் உரித்தாகட்டும். அதோடு, மாணவர்களின் வெற்றிக்காகப் பின்னணியில் உழைத்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் உதவியிருக்கும் பெற்றோர்களுக்கு நன்றிகலந்த பாராட்டுகள். மேலும், மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வழிகாட்டிய தலைமையாசிரியர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

மாணவர் முழக்கம் பேச்சுப் போட்டி மலேசியக் கல்வி அமைச்சின் அனுமதியுடன் நடைபெறுகிறது. இம்முறை 10ஆவது ஆண்டில் வெற்றிகரமாகக் காலடி பதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 



Comments

Popular Posts:-

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி