பேரா மாநில நிலை வளர்தமிழ் விழா 2021 - வெற்றியாளர் காணொலி
பேரா மாநில நிலை வளர்தமிழ் விழா 2021, கடந்த செப்டம்பர் 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் வெகுச் சிறப்புடன் நடைபெற்றது. 21ஆம் ஆண்டில் காலடி வைத்துள்ள வளர்தமிழ் விழாப் போட்டிகளும் நிறைவு நிகழ்ச்சியும் இம்முறை இயங்கலையில் மிக நேர்த்தியுடன் நடைபெற்றன.
பேச்சுப் போட்டி, கவிதை ஒப்புவித்தல், கட்டுரைப் போட்டி மற்றும் புதிர்ப் போட்டி ஆகிய 4 போட்டிகள் நடத்தப்பட்டன. முதலில் மாவட்ட நிலையிலும் பின்னர் மாநில நிலையிலும் போட்டிகள் நடைபெற்றன. பேரா மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த சற்றேறக்குறைய 1050 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் ஆதரவுடன் பேரா மாநிலத் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த 21 ஆண்டுகளாக வளர்தமிழ் விழா பேரா மாநிலத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டு வளர்தமிழ் விழா மாநிலப் போட்டியினைப் பத்தாங் பாடாங் முவாலிம் மாவட்டத் தலைமையாசிரியர் கழகம் பொறுப்பேற்று மிகவும் நேர்த்தியுடனும் தமிழ்மணம் கமழும் வகையில் நடத்தி அனைவருடைய பாராட்டையும் பெற்றது.
வளர்தமிழ் விழா 2021 - மின் நிரலிகை
படத்தைச் சொடுக்கவும் |
வளர்தமிழ் விழா 2021
வியனக் காணொலி
வளர்தமிழ் விழா 2021
பேச்சுப் போட்டி வெற்றியாளர் காணொலி
வளர்தமிழ் விழா 2021
கவிதை ஒப்புவித்தல் போட்டி வெற்றியாளர் காணொலி
வளர்தமிழ் விழா 2021
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் காணொலி
வளர்தமிழ் விழா 2021
புதிர்ப் போட்டி வெற்றியாளர் காணொலி
வளர்தமிழ் விழா 2021
கதைக் கூறும் போட்டி வெற்றியாளர் காணொலி
வளர்தமிழ் விழா 2021
ஒட்டுமொத்த வெற்றியாளர் காணொலி
வளர்தமிழ் விழா 2021
மலேசிய நண்பன் நாளிதழ் செய்தி [05.09.2021]
வாழ்த்துககள்
ReplyDelete