மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன் தமிழ் அறவாரியம், தேசிய தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றம், மலாயா தமிழ் ஆசிரியர் சங்கம், தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்கம், மலேசிய இந்தியர் விண்வெளி அறிவார்ந்தோர் கழகம் ஆகியோரின் கூட்டு ஏற்பாட்டில் மலேசியத் தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு, 17 நவம்பர் 2018 காரிக்கிழமை, மலாயாப் பல்கலைக்கழக வணிக கணக்கியல் புலத்தில் காலை மணி 8:00 முதல் மாலை மணி 6:00 வரை நடைபெற்றது. சுப.சற்குணன், சந்திரன் கோவிந்தன், மு.அர்ச்சுணன் இந்த மாநாட்டில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன், தலைமையாசிரியர் கழகத்தின் தேசியத் தலைவரும் பேரா மாநிலத் துணைத்தலைவருமாகிய மு.அர்ச்சுணன் ஆகிய இருவரும் மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் ஆய்வுக் கட்டுரை படைத்தனர். அவர்களுள் பேரா மாநில ஆசிரியர்களே முதலிடம் வகித்தனர். பேரா மாநிலத்தைச் சேர்ந்த மொத்தம் ஏழு ஆசிரியர்கள் இந்த மாநாட்டில் கட்டுரை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைய காலமாகப் பேரா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிர...
Comments
Post a Comment