SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - சிந்தனைத்திறன் புதிர்ப்போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை
தமிழ்ப்பள்ளிகளுக்கான உயர்நிலை சிந்தனைத்திறன் புதிர்ப்போட்டி கடந்த 28.07.2019 ஞாயிறு மலேசிய விவசாயப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தேசிய நிலையிலான இந்தப் போட்டியில் 114 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்டன.
பேரா மாநிலம், கோலா கங்சார் மாவட்டம் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ மாறன் முதல் பரிசைப் பெற்று சாதனை படைத்தார். முதல்நிலை வெற்றியாளருக்குக் கோப்பை, மலேசிய ரிங்கிட் 500.00 மற்றும் சுழற்கிண்ணமும் பரிசாக வழங்கப்பட்டது.
Comments
Post a Comment