கிரியானில் தமிழ் நளிநயப் பாடல் (Action Song) போட்டி

கடந்த மார்ச்சு 30 முதல் ஏப்ரல் 1 வரை பேரா , கிரியான் மாவட்டத்தில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ‘ கல்விப் பெருவுலா ’ நிகழ்ச்சி நடைப்பெற்றது. மலேசியக் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ மாட்சீர் காலிட் இந்தக் கல்விப் பெருவுலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். இந்தப் பெருவுலா நிகழ்ச்சியின் ஓர் அங்கமாகக் கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்காக நளிநயப் பாடல் போட்டி ( Action Song ) நடைபெற்றது. இப்போட்டி தமிழ்மொழியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கிரியான் மாவட்டத்தைச் சேர்ந்த 11 தமிழ்ப்பள்ளிகள் இப்போட்டியில் பங்கெடுத்தன. ஒவ்வொரு பள்ளியும் மிகவும் சிறப்பான முறையில் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தி பொதுமக்களின் பாராட்டை அள்ளிக் குவித்தன. முதல் பரிசு - செயிண்மேரி தமிழ்ப்பள்ளி இரண்டாம் பரிசு - செர்சோனீசு தமிழ்ப்பள்ளி மூன்றாம் பரிசு - ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி வெற்றிக் குழு - செயிண்மேரி தமிழ்ப்பள்ளி கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் ஆர்.பி.ஜெயகோபாலன் இப்போட்டிக்கான ஒ...