SJK(T) LDG.PERAK RIVER VALLEY - எந்திரவியல் தேசிய நிலைப் போட்டியில் முதல்பரிசு

பேரா, கோல கங்சார் மாவட்டம், பேரா ரிவர் வேலி தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  தேசிய நிலை எந்திரவியல் இயங்கலைப் போட்டியில் [Online National Robotic Competition (ONRC)] போட்டியில்  கலந்துகொண்டு பேரா மாநில அளவில் முதல் நிலை வெற்றி பெற்றுள்ளனர். 

3 orang murid SJK(T) Ldg.Perak River Valley, Daerah Kuala Kangsar, Perak menang sebagai Johan dalam Online National Robotic Competition (ONRC).

2019ஆம் ஆண்டில் இதே போட்டியில் 5-ஆவது இடத்தைப் பிடித்த இப்பள்ளி இந்த 2020இல் முதல் நிலையில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

பேரா ரிவர் வேலி தோட்ட தமிழ்ப்பள்ளியானது, கடந்த இரு ஆண்டுகளில் இப்போட்டியில் கலந்து கொண்ட பேரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரே தமிழ்ப்பள்ளி என்பதும் குறிப்பிடத்தக்கது.


இப்போட்டியில் கலந்து கொண்டு பள்ளிக்குப் பெருமை சேர்த்த நாவியா ஶ்ரீ த/பெ ரிச்சட் ஜேசன் (ஆண்டு 3), ஶ்ரீ தர்சினி த/பெ குணசேகரன் (ஆண்டு 2) மற்றும் கவிஷன் த/பெ இராமன் ஆகிய மூன்று மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய வீ.மோகன்குமார் மற்றும் ஆசிரியர்களுக்கும் தமது வாழ்த்துகளைப் பள்ளியில் தலைமையாசிரியர் திரு.ஆந்திரா காந்தி தெரிவித்துக்கொண்டார்.

பேரா ரிவர் வேலி தோட்ட தமிழ்ப்பள்ளியின் இந்த மகத்தான வெற்றியானது பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம்.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை