SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - தங்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

அனைத்துலக இளம் ஆய்வாளர் போட்டி 2018 இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில், செப்டம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரையில் 3 நாட்களுக்கு நடைபெற்றது. அந்தப் போட்டியில் பேராக் மாநிலம், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த முகமது பைசுல், விலோசினி சுந்தரராஜன் ஆகிய இரண்டு மாணவர்கள் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.

மலேசியாவைப் பிரதிநிதித்து அனைத்துலக நிலையில்தங்கப் பதக்கம் வென்ற சாதனை மாணவர்கள் 14.9.2018ஆம் நாள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தனர். 

மாணவர்கள் முகமது பைசுல், விலோசினி மற்றும் அவர்களுடன் சென்ற ஆசிரியர்கள் செல்வி கண்மணி திருமலை, செல்வி சங்கீதா மாதவன் ஆகியோர் அடங்கிய இந்தச் சாதனைக் குழுவினர் நேராக மனிதவள அமைச்சர் மாண்புமிகு திரு.குலசேகரன் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். மாண்புமிகு அமைச்சர் இவர்களைத் தன்னுடைய அலுவலகத்தில் சந்தித்து உற்சாக வரவேற்பு வழங்கினார். 

தங்கப் பதக்கம் பெற்று மலேசியா திரும்பிய குழுவினருக்கு மாண்புமிகு குலசேகரன் பாராட்டுதலையும் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொண்டார். மேலும், இந்தக் குழுவினரோடு அளவளாவி மகிழ்ந்தார்.




அதனையடுத்து, கல்வித் துணைக்கல்வி மாண்புமிகு தியோ நி சியன் அவர்களை சந்தித்து மகிழ்ந்தனர். கலவித் துணையமைச்சர் மாணவர்களின் சாதனையைப் பற்றி மகிழ்ச்சியாகப் பேசினார். மாணவர்களுக்கும் ஆசிரியரகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மாணவர்கள் இருவரும் தங்களின் கல்வியைச் சிறப்பாகத் தொடர்ந்து தங்களின் எதிர்காலக் குறிக்கோளை அடைவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என மாணவர்களை அறிவுறுத்தினார்.





இந்தச் சந்திப்புகளின்போது மாணவர்களின் பெற்றோர்கள், குழுவின் ஆலோசகர் தென்னரசு குப்புசாமி ஆகியோரும் உடனிருந்தனர். 

தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவர்களை மலேசிய அமைச்சரும் துணை அமைச்சரும் வரவேற்று வாழ்த்திய நிகழ்வானது மாணவர்களின் வாழ்வில் மறக்க முடியாதது மட்டுமல்ல, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது.



Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை