SJK(TAMIL) KHIR JOHARI - தேசிய நாள் கோலம் உருவாக்கிச் சாதனை



பேரா, தாப்பா ரோட், கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளியில் 61ஆவது தேசிய நாளை முன்னிட்டு மாபெரும் கோலம் உருவாக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து 35 X 20 சதுர அடி கொண்ட இந்த மாபெரும் கோலத்தை அமைத்துச் சாதனை செய்துள்ளனர்.

இந்தக் கோலத்தை அமைப்பதற்கு 300 கிலோ கிராம் அரிசி பயன்படுத்தப்பட்டது. கோலம் உருவாக்கம் பணி காலை மணி 8:00 தொடங்கி மூன்று மணி நேரத்திற்குப் பிறகு காலை மணி 11:00க்கு நிறைவடைந்தது.

மாணவர்களிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த மாபெரும் கோலம் உருவாக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகத் திகழும் கோலத்தை அமைத்ததன் வழி, கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளி வரலாற்றுச் சாதனை ஒன்றனை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.





Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

i-EIE 2019 புத்தாக்கப் போட்டியில் பேரா தமிழ்ப்பள்ளிகள் சாதனை