பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாடு கருத்தரங்கம் 2018

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாடு கருத்தரங்கம் கடந்த 25.8.2018ஆம் நாள் பேரா மாநில அரசு செயலகத்தின் பங்குவேட் மண்டபத்தில் நடைபெற்றது. காலை மணி 8:30 முதல் மாலை மணி 5:00 வரை நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் பேரா மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் நிருவாகத் நிருவாகத்  துணைத் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

கீழ்க்காணும் அம்சங்களை முக்கிய விவாதக் கருப்பொருளாகக் கொண்டு இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.

1.தமிழ்ப்பள்ளிகளின் நிலப் பிரச்சனைகள்
2.தமிழ்ப்பள்ளிகளின் கட்டட, வகுப்பறை வசதிகள்
3.தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடும் மாணவர் உருவாக்கமும்
4.தமிழ்ப்பள்ளிகளில் 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன்
5.தமிழ்ப்பள்ளிகளில் இணைப்பாட வளர்ச்சித் திட்டங்கள்

நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹரப்பான்) தேர்தல் கொள்கை அறிக்கையின் அடிப்படையில்  பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் மேம்பாடுகளையும், வளர்ச்சியையும் உருவாக்கி, 21ஆம் நூற்றாண்டின் நவீன கல்விச் சூழலுக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளிகளை முன்னேற்றி அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கத்தின் சிறப்பு அங்கமாக 134 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 2060 யு.பி.எஸ்.ஆர். மாணவர்களுக்குத் தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு வழிகாட்டி நூல் இலவசமாக வழங்கப்பட்டது.



சிறப்புப் பெருமகர்


திறப்புரை - மாண்புமிகு ஙா கோர் மிங், நாடாளுமன்ற துணைச் சபாநாயகர்

வரவேற்புரை - மாண்புமிகு அ.சிவநேசன், பேரா ஆட்சிக்குழு உறுப்பினர்























Comments

Popular Posts:-

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]