Posts

SJK(T) CHETTIARS. IPOH - புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் இரண்டாம் பரிசு

Image
கடந்த 24.08.2019 , சனிக்கிழமை ஈப்போ ஏ.யி.ஓன் ஸ்டேசன் 18 பேரங்காடியில் தேசிய அறிவியல் வாரம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த பாலர் பள்ளி மாணவியான  செல்வி தனுசியா த/பெ ரவீந்திரன் (வயது 6) பேரா மாநிலத் தின் நிகராளியாக அறிவியல் நவீன புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டு இரண்டாம் நிலையில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.    Adik Taanusiya a/p Ravindran murid Prasekolah SJK(T) Chettiars, Ipoh menang Hadiah Naib Johan dalam Pertandingan Beragam Bertemakan Sains & Futuristik sempena Minggu Sains Negera 2019 இந்த ஆடை நெகிழி கரண்டிகள் , உணர்வறிக் கருவி (Sensor) மற்றும் குறுவட்டுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் ஈர்த்த இவ்வுடையில் உள்ள சென்செர் கருவியின் மூலம் பெண் பிள்ளைகள் காணாமல் போனால் உடனுக்குடன் பெற்றோர்கள் கைப்பேசியின் மூலம் அறிந்து கொண்டு தங்கள் பிள்ளைகளை க்  காப்பாற்ற முடியும் என்பதனை  மையமாகக் கொண்டு இவ்வுடையை வடிவமைத்து உள்ளனர்.  இந்தப் புத்தாக்க...

SJK(T) LADANG KOTA LIMA - தேங்காய் ஓட்டில் ஜாலூர் கெமிலாங் உருவாக்கி மலேசியச் சாதனை

Image
பேரா மாநிலம், லெங்கோங், கோத்தா லீமா தோட்டத் தமிழ்ப்பள்ளியில்   தேங்காய் ஓட்டில் மிகப்பெரிய ஜாலூர் கெமிலாங் கோடியை உருவாக்கி  மலேசியச் சாதனை படைத்துள்ளனர்.  SJK(T) LADANG KOTA LIMA, LENGGONG, PERAK Mencipta rekod dan mendapat penganugerahan Sijil Malaysia Book Of Records dengan menghasilkan bendera Jalur Gemilang sebesar 20m x 10m menggunakan  kulit kelapa muda. தலைமையாசிரியர் திரு.பால்ராஜ் பேரா தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் திரு.சுப.சற்குணன் பேரா தமிழ்மொழி உதவி இயக்குனர் திரு.ந.சந்திரசேகரன் [காணொலி] 

SJK(T) Ladang Kota Lima, Lenggong Cipta Malaysia Book Of Records

Image
Sekolah : SJK(T) LADANG KOTA LIMA, LENGGONG, PERAK Pencapian : Mencipta rekod dan mendapat penganugerahan Sijil Malaysia Book Of Records dengan menghasilkan bendera Jalur Gemilang sebesar 20m x 10m menggunakan  kulit kelapa muda. Read More..

விழி - மடல் 21 : இராட்சசியை மிஞ்சும் பேரரசிகள்

Image

SJK(T) CHETTIARS, IPOH - மனமகிழ் கற்றல் மையத் திறப்பு விழா

Image

SJK(T) LADANG ALLAGAR - தலைமை ஆசிரியருக்குத் தமிழ்நாட்டில் சிறப்பு விருது

Image
பேரா மாநிலம் , லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம் , அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி , புனிதா சுப்பிரமணியம் அவர்களுக்குத் தமிழ் நாட்டில் ‘ ஆசிரியர் செம்மல் விருது ' வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. Guru Besar SJK(T) Ladang Allagar, Daerah Larut Matang dan Selama menerima Anugerah Tokoh Guru di Chennai,      Tamil Nadu, India sempena Hari Guru Negara India pada 05.09.2019. இந்தியாவில் ஆசிரியர் நாள் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் ஆசிரியர் நாள் விழா நடத்துவது வழக்கம். 2019 ஆண்டு விழாவில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மூவருக்கு ’ ஆசிரியர் செம்மல் ’ விருது வழங்கப்பட்டது. தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் இவர்களைத் தேர்ந்தெடுத்தது. அந்த வகையில் , பேரா மாநிலத்தில் உள்ள அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி , புனிதா சுப்பிரமணியம் இவ்விருதைப் பெற்றுள்ளார். 05.09.2019ஆம் நாள் , சென்னையில் உள்ள மேனாள் அதிபர் டாக்டர்...

SJK(T) JENDERATA BHG 3 - புத்தாக்கப் போட்டியில் மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனர்

Image
கடந்த 30 & 31.07.2019இல் வடமலேசியப் பல்கலைக்கழகத்தில், அனைத்துலக கற்றல் புத்தாக்கப் போட்டி   (INTERNATIONAL LEARNING INNOVATION COMPETITION)    நடைபெற்றது.   இ தில் கலந்துகொண்ட  பேரா,  பாகான் டத்தோ, ஜென்ரா ட்டா    பிரிவு 3 தமிழ்ப்பள்ளி  மாணவர்கள் கலந்துகொண்டு  வெள்ளிப் பதக்கம்  வென்றனர். தரணி கிருஷ்ண ராவ், கிஷேந்தேவ் தமிழ்ச்செல்வன், ருகேஷ் ஞானசேகரன் ஆகிய மூன்று மாணவர்களே இந்தச் சாதனைக்கு உரியவர்கள்.  அனைத்துலக நிலை போட்டியான இதில் கலந்துகொண்ட ஒரே தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இவர்களாவர்.  அறிவியல் துறையில் இவர்களின் புத்தாக்கம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.  இப்பள்ளி ஆசிரியர் அர்வினா சுப்பிரமணியம் மாணவர்களைப் பயிற்றுவித்துப் போட்டிக்கு அழைத்து ச்  சென்றார்.

SJK(T) GERIK - STEM புத்தாக்கப் போட்டியில் முதல் பரிசு

Image
பேரா  மாநிலம், மேல் பேரா மாவட்டம்,  கிரீக் குழுவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தேசிய நிலை அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், கணிதப் புத்தாக்கப் போட்டியில் (National STEM Innovation Carnival 2019) கலந்துகொண்டு முதல் பரிசை வென்று சாதனை படைத்தனர். இந்த வெற்றிக்கான பரிசாக மாணவர்களுக்கு RM300.00  (முந்நூறு வெள்ளி), பதக்கம், நற்சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன. இந்தப் போட்டி கடந்த 29.08.2019ஆம் நாள், ஈப்போவில் உள்ள உங்கு ஓமார் தொழிக்கல்விக் கழகத்தில் நடந்தது. ஹரிஷ் கென்னடி, ரூஹன் ராம்குமார், மதன் நேசன்ராஜ் சிவநேசன் ஆகிய 3 மாணவர்கள் இந்தச்  சானையைச் செய்துள்ளனர். ஆசிரியர் செல்வி சர்வினா குணசீலன் மாணவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்து போட்டிக்காக அணியப்படுத்தியுள்ளார். பள்ளியின் தலைமையாசிரியர் திரு.பாலசந்திரன் மாணவர்களுக்கு ஊக்கமூட்டுவதற்காக உடன் வந்திருந்தார்.  கிரீக் குழுவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும். 

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

Image
சிலாங்கூர் மாநில  யூ.பி.எஸ்.ஆர் முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்பு KERTAS PEPERIKSAAN PERCUBAAN UPSR SJK(T) NEGERI SELANGOR  (கூகிள் இயக்ககம் தொடுப்பைச்   சொடுக்கி பதிவிறக்கம் செய்யவும்) (Klik Link Google Drive dan Download)  https://drive.google.com/open?id=12-gi1_PLltuGWTIfuCmKsgEo1LuhvXVC நன்றி :   https://tamilsjkt.blogspot.com/

UPSR 2019 தேர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்

Image
04.09.2019  தொடங்கி 12.09.2019 வரை ஆறாம் ஆண்டு மாணவருக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு நடைபெறவுள்ளது. பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த நமது மாணவச் செல்வங்கள் இந்தத் தேர்வுக்காக அமரவுள்ளனர். நமது மாணவர்கள் அனைவரும் நனிச்சிறந்த முறையில் இந்தத் தேர்வினை எழுதுவதற்கும் எதிர் கொள்வதற்கும் நமது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.  மாணவரோடு சேர்ந்து நாம் அனைவரும்  யூ.பி.எஸ்.ஆர்  2019 தேர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்  கடந்த 6 ஆண்டுகளாக இந்த மாணவர்கள் நமது தமிழ்ப்பள்ளிகளில் நன்முறையில் கல்வி பயின்று வந்தவர்கள். குறிப்பாக ,  இவ்வாண்டில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வினைக் குறியாகக் கொண்டு கண்ணும் கருத்துமாகப் பாடங்களைப் படித்தவர்கள் ;  பயிற்சிகள் செய்தவர்கள் ;  அயராத முயற்சியில் இடையறாமல் உழைத்தவர்கள். இந்த மாணவர்களின் கடுமையான உழைப்புக்கும் முயற்சிக்கும் நல்லதொரு பலன் கிடைக்க வேண்டுவோம். இளமை வயதின் மனமகிழ்வுகள் அனைத்தையும் கடந்த 9 மாதங்களாகத் தியாகம் செய்திருக்கும் நமது மாணவர்களின் ஈகத்திற்கு எல்லாம் வல்ல இறைமை இனியதொரு வெற்றியை நல்கிட இறைஞ்சுவோம்....