பேரா மாநிலத்தின் சிறந்த நூலகப் போட்டியில் 2 தமிழ்ப்பள்ளிகள் வெற்றி

2021ஆம் ஆண்டுக்கான பேரா மாநில நிலையில் சிறந்த 13 நூலகங்கள் அதிகாரப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில நிலையில் சிறந்த நூலகப்  போட்டியில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளன.


குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவுக்கான போட்டியில், லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தின் தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி இரண்டாம் பரிசை வென்றுள்ளது. இதே பிரிவில் மூன்றாம் பரிசினை பத்தாங் பாடாங் மாவட்டத்தின் பனோப்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றுள்ளது.

மாநில நிலையில் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடியிருப்பது பாராட்டுக்குரிய செய்தியாகும். நமது தமிழ்ப்பள்ளிகளும் மற்ற பள்ளிகளுக்கு இணையாக மிகச் சிறப்பாக மிளிர்கின்றன என்பதற்கு இந்த வெற்றியானது நல்லதொரு சான்றாகும்.

பேரா மாநில நிலையில் குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவில் 2ஆம் பரிசினை வாகை சூடிய தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி நூலகத்தின் காட்சிகளைக் கீழே காணலாம்.


தலைமையாசிரியர் திருமதி ஐ.சந்தனமேரி

நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி தா.மோகனவள்ளி






பேரா மாநில நிலையில் குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவில் 3ஆம் பரிசினை வாகை சூடிய பனோப்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி நூலகத்தின் காட்சிகளைக் கீழே காணலாம்.



தலைமையாசிரியர் திரு.ரா.சரவணன்


நூலகப் பொறுப்பாசிரியர் குமாரி ரா.பாக்கியவதி






தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் பானோப்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி இரண்டும் பெற்றுள்ள இந்த மாநில நிலை வெற்றி தமிழ்ப்பள்ளிகளுக்கே பெருமை சேர்த்துள்ளது எனலாம்.



Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) KERUH - மின்னல் பண்பலையின் இளம் வடிவமைப்பாளர் திட்டம்

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்