SJK(T) LDG.SUNGAI WANGI II -இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

கடந்த 17.09.2020 முதல் 19.09.2020 இந்தோனேசியாவில் புத்தாக்கம் மற்றும் புனைவாக்கப் போட்டி [i3F Indonesia Invention Innovation Festival 2020] நடந்தது. பேரா, மஞ்சோங் மாவட்டம், சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஐவர் இந்த அனைத்துலகப் போட்டியில் மிகச் சிறந்த சாதனை படைத்துள்ளனர். Kumpulan Murid SJKT Ldg.Sungai Wangi II , Sitiawan menang Pingat Perak & Best Presentation Award dalam Pertandingan i3F Indonesia Invention Innovation Festival 2020 yang berlangsung atas talian pada 17.09.2020 hingga 19.09.2020. இயங்லையில் நடந்த இப்போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் [SILVER AWARD] சிறந்த படைப்பாற்றலுக்கான [BEST PRESENTATION AWARD] விருதையும் ஒருசேர வென்று சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக அரங்கில் சாதனையாளர்களாக உருவாகியுள்ளனர். அறிவியல் கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் திறன், மொழி ஆளுமை என புதிய பரிணாமத்தில் 3 நாட்கள் இப்போட்டி நடைபெற்றது. இணையம் வழி புதிய கோணத்தில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் [THE FIRST VIRTUAL INVENTION EXHIBITION] முற்றிலும் புதுமையான இப்போட்...