SJK(T) ST.THERESA'S CONVENT - அனைத்துலக STEM OLYMPIAD போட்டியில் சாதனை

கடந்த 18.12.2019 - 20.12.2019 ஆகிய நாட்களில் மலேசிய புத்ரா பல்கலைக்கழக  (UNIVERSITI PUTRA MALAYSIA) ஏற்பாட்டில்  அனைத்துலக அறிவியல், தொழில்நுட்பம, பொறியியல், கணித ஒலிம்பியாட் போட்டி (INTERNATIONAL STEM OLYMPIAD) நடைபெற்றது.

Murid-murid SJK(T) St.Theresa's Convent, Daerah LMS menang 1 Silver Award dan 1 Special Award dalam International STEM OLYMPIAD yang berlangsung di UPM pada 18-20 Disember 2019

இந்தப் போட்டியில் கலந்துகொண்ட பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம்,  செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு வெள்ளிப் பதக்கமும் சிறப்பு விருதும் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

120 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பெற்றுள்ள இந்த வெற்றி மிகவும் பாராட்டத்தக்க ஒன்று.



செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 2 அணிகளில் 6 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

அணி 1:-
1.தான்யாலட்சுமி விக்னேஸ்வரன்
2.தமிழ்ச்செல்வன் கனகநாதன்
3.மித்ரா கணேசன்

அணி 2:-
1.பிரவின்ராஜ் லோகநாதன்
2.கவினாஸ்ரீ சங்கர்
3.அவினேஷ் மனோகரன்

பொறுப்பாசிரியர்கள்:-
1.லோகநாதன் பெருமாள்
2.விமலா செல்வராஜு


செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளிக் குழுவினரின் இந்த அனைத்துலக நிலைச் சாதனை பள்ளிக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.



Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

YOUTUBE காணொலி தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

பாவாணம் மின் நாள் பாட த்திட்டத்தினை உருவாக்கி ஆசிரியர்கள் சாதனை