SJK(TAMIL) LDG.BULUH AKAR : புத்தாக்கப் போட்டியில் பங்கெடுக்க பாங்காக் பயணம்

“வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம்” என்னும் முழக்கவரிக்கு ஏற்ப பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் கடந்த ஆண்டில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிறந்துள்ள 2019-ஆம் ஆண்டில் முதலாவது வெற்றியாக பேராக் மாநிலத்தில் உள்ள பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புத்தாக்கப் போட்டியில் கலந்துகொள்ள நாளை வெள்ளிக்கிழமை பிப்ரவரி 1-ஆம் தேதி பாங்காக் நோக்கிப் பயணமாகிறார்கள்.


இப்பள்ளி மாணவர்களான மாணவர் சூரியமூர்த்தி சிவம், தாமரைச்செல்வி கிருஷ்ணன் ஆகிய இருவர் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். ஆசிரியர் திருமதி மு. அனுராதா,திருமதி மு. நிர்மலா தேவி ஆகியோர் உடன் செல்கிறார்கள். இப்போட்டி பிப்ரவரி 2 முதல் 7-ம் தேதி வரை தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் மாநகரில் நடைபெறுகிறது என்னும் தகவலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மனஹரன் தெரிவித்தார்.

 

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை