பேரா மாநில நிலை மலாய்மொழி விழா 2018 (KARNIVAL BM)

கடந்த 28.07.2018ஆம் நாள் சித்தியவான் உக் இங் சீனப்பள்ளியில் பேரா மாநில நிலை மலாய்மொழி விழா 2018 வெகுச் சிறப்புடன் நடந்தது. 

 
மலாய்மொழி தனியாள் நாடகம் (TEATER SOLO) மற்றும் மலாய்மொழிப் புதிர் (KUIZ BAHASA MELAYU) ஆகிய இரண்டு போட்டிகளில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாநில நிலைக்குத் தேர்வுபெற்ற தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் பாராட்டுக்கு உரியவை. இதன் நிறைவு விழாவில் பேரா மாநில முதல்வர் மாண்புமிகு அஹ்மாட் பைசால் அசுமு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியதோடு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

மலாய்மொழி தனியாள் நாடகப் போட்டியில் இரண்டாம் நிலை வெற்றியாளராக தெலுக் இந்தான் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவி தாரணி தவக்குமார் வெற்றிபெற்றார்.


இதே போட்டியில் 3ஆம் நிலை வெற்றியாளராக பாகான் செராய், ஜின்செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி சர்வினி முருகையா தேர்வுபெற்றார்.


நான்காம் நிலையில் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி மாணவி ஹர்மிதா கார்த்திகேயன் பரிசைத் தட்டிச் சென்றார்.


தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்கேற்பும் அடைவும் பாராட்டும்படியாக இருந்தது எனலாம். அதேபோல், நமது மாணவர்களின் தனியாள் நாடகப் படைப்புகள் தரமாகவும் சிறப்பாகவும் இருந்தன என்றால் மிகையாகாது.

அதேபோல, மலாய்மொழி எழுத்துப் போட்டியில் 3 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்றன. அவர்கள் ஆறுதல் பரிசு பெற்றனர்.

பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி & கமுண்டிங் தமிழ்ப்பள்ளி

ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி
வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும், மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் உரித்தாகட்டும்.

Comments

Popular Posts:-

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]