Posts

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

Image
கடந்த 17.09.2022 ஆம் நாள் மாணவர் முழக்கம் 2022 காலிறுதிச் சுற்று நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டி இயங்கலை முறையில் நடந்தது. பேரா மற்றும் பகாங் மாநிலத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். பேரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். ஒருவர் மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சூரியவேந்தன். மற்றொரு வெற்றியாளர் லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி மாணவி ரக்‌ஷிதா. சிறப்பான படைப்பினை வழங்கியதோடு, நல்ல வாதத் திறமையை வெளிப்படுத்தி நடுவர்களின் வினாக்களுக்கும் தகுந்த பதிலை வழங்கி  இவர்கள் இருவரும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுகின்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.  இவர்களின் இந்த வெற்றியானது தத்தம் பள்ளிகளுக்கு மட்டுமன்றி பேரா மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது எனலாம்.

மாணவர் முழக்கம் 2022 - பேராவின் 18 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வு

Image
மாணவர் முழக்கம் 2022 தேர்வுச் சுற்று நடைபெற்று முடிந்துள்ளது. போட்டியாளர்கள் தங்களின் பேச்சினை 1 நிமிடம் 30 வினாடிக்குக் காணொலியாகப் பதிவுசெய்து ஏற்பாட்டளருக்கு அனுப்பிவைக்க வேண்டும். நடுவர் குழுவினரால் தேர்வு செய்யப்படும் சிறப்பான காணொலிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும். அதன்  அடிப்படையில், பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 18 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.  இவர்களின் இந்த வெற்றியானது தத்தம் பள்ளிகளுக்கு மட்டுமன்றி பேரா மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. பேரா மாநிலத்தின் 18 வெற்றியாளர்களின் பட்டியலைக் கீழே காணலாம். மாணவர்களின் இந்த வெற்றிக்குப் பின்னணியில் இருந்து பாடாற்றிய தலைமையாசிரியர்கள், பொறுப்பாசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். காலிறுதிச் சுற்றில் பேரா மாநிலப் போட்டியாளர்கள் சிறப்பான படைப்பினை வெளிப்படுத்த வாழ்த்துகள்.

SJK(T) KLEBANG - PdP PITCHING போட்டியில் ஆசிரியை காமினி முதல் நிலை வெற்றி

Image
பேரா, வடகிந்தா மாவட்ட நிலையில் நடைபெற்ற 3 நிமிட கற்றல் கற்பித்தல் ஏடலாக்கப் போட்டியில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி ஆசிரியை திருமதி காமினி கங்காதரன் முதல் நிலையில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். வடகிந்தா மாவட்ட நிகராளியாக இவர் மாநில நிலை போட்டியில் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிப் பெயர் / Nama Sekolah:  கிளேபாங் தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா SJKT KLEBANG, CHEMOR, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Pertandingan :  3 நிமிட கற்றல் கற்பித்தல் ஏடலாக்கம் 3 MINUTES PdP PITCHING நிலை / Peringkat:  மாவட்ட நிலை / PERINGKAT DAERAH அடைவு / Pencapaian:  முதல் நிலை / TEMPAT PERTAMA நாள் / Tarikh:  27 Ogos 2022 ஏற்பாட்டாளர் / Penganjur:  மலேசியக் கல்வி அமைச்சு  KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA தலைமையாசிரியர் / Nama Guru Besar:  திருமதி பத்மினி துரைசிங்கம்  PN. PATHMANI DORAISINGGAM சாதனை ஆசிரியர் / Nama Guru:  திருமதி காமினி கங்காதரன்  KAAMANI A/P GANGATHARAN

SJK(T) CHETTIARS, IPOH - INTOC அறிவியல் புத்தாக்கப் போட்டியில் தங்கப் பதக்கம்

Image
பள்ளி- பெயர் / Nama Sekolah: செட்டியார் தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா SJK(TAMIL) CHETTIARS, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Pertandingan: INTERNATIONAL SCIENCE PROJECT COMPETITION AT TURKEY நிலை / Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவுநிலை / Pencapaian: தங்கப் பதக்கம் / GOLD AWARD நாள் /  Tarikh: 28 MEI 2022 ஏற்பாட்டாளர் / Penganjur: INTOC - GLOBAL INTERNATIONAL SCIENCE PROJECT COMPETITION AT TURKEY தலைமையாசிரியர் / Nama Guru Besar: PN. PACHAYAMMAL   A/P RENGASAMY பொறுப்பாசிரியர் / Guru Terlibat: திருமதி செல்வி முருகையா PN. CHELVI   A/P MURUGAYYA சாதனை மாணவர்கள் / M urid Terlibat: 1. லோகேந்திரன் சிவக்குமார் / LOHENDRAA A/L SIVAKUMAR 2. சர்வின் விஜயராமன் / SHARVIKA A/P VIJAYA RAMAN 3. அமரேஸ் / மகேஸ்வரன் / AMARESS A/L MAGESWAREN 4. தீபிகா விஜயராமன் / THIPIKAA A/P VIJAYA RAMAN

SJK(T) LADANG GULA - 'தொல்காப்பியர் அறிவகம்' உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா

Image
பேரா, கிரியான் மாவட்டம், கூலாத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொல்காப்பியர் அறிவகம், உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா கண்டது. பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், தோட்ட மேலாளர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.   இத்திறப்பு விழாவில் மாவட்ட கல்வி அதிகாரியைப் படிநிகர்த்து Pegawai SISC+ திரு.மயூடின் பின் சஹாரி அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இவ்வகுப்பறையினைப் பள்ளி மாணவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இது போன்ற முயற்சிகள் ஒவ்வொரு பள்ளியிலும் முடுக்கிவிடப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் சிந்தனைத் திறன் தொடர்பான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை அறிந்து வைத்திருப்பதுடன் அதனைச் சிறந்த முறையில் மாணவருக்குக் கொண்டு சேர்க்க வழிவகை காண வேண்டும் என்றார்.   மாணவரிடையே சிந்தனைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இவ்வகுப்பில் பல்வேறு வகையான சிந்தனைத் திறன் தொடர்பான நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தோட்ட மேலாளர் திரு.பிரபாகரன் தண்ணீர்மலை அவர

SJK(T) LDG.BULUH AKAR - EUROINVENT புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்க பட்டயச் சான்றிதழ் வென்று சாதனை

Image
2 orang murid SJK(T) Ladang Buluh Akar, Daerah Perak Tengah menang Silver Diploma Award dalam pertandingan European Exhibition Of Creativity And Innovation 2022 peringkat antarabangsa ரோமேனிய நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய ஆக்கம் மற்றும் புத்தாக்க கண்காட்சியில் (EUROPEAN EXHIBITION OF CREATIVITY AND INNOVATION - EUROINVENT 2022), பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய "எலி, பல்லி, கரப்பான் பூச்சி போன்ற அழிவு செய்யும் உயிரினங்களை கொல்லாமல் இயற்கையாக கட்டுப்படுத்தும் கண்டுப்பிடிப்பு" வெள்ளிப் பதக்கத்திற்கான பட்டயச் சான்றிதழை (DIPLOMA SILVER AWARD)  வென்றது. இப்போட்டியில் நோர் சஃபிகா முகமது அலி மற்றும் நூருல் நசீரா முகமது நசீர் ஆகிய ஆறாம் ஆண்டு மாணவர்கள் இருவர் கலந்துகொண்டனர். ஆசிரியர் திருமதி அனுராதா முருகேசன் பயிற்றுனராக இருந்து மாணவர்களை வழிநடத்தினார்.   இயங்கலை வாயிலாக நடைபெற்ற இப்போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து பங்குபெற்ற ஒரே தொடக்கப்பள்ளி பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் அமெரிக்கா, கனடா, இந்தியா, உற்பட 27 நாடுகளிலி

SJK(T) LDG.STRATHMASHIE - SAMNOVA 2022 மகிழ் கற்றல் போட்டியில் தங்கமும் வெள்ளியும் வென்று சாதனை

Image
SJK(T) Ladang Strathmashie menang 1 pingat emas dan 1 pingat perak dalam Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan (SAMNOVA, 2022)  பாகான் டத்தோ மாவட்டம், ஸ்ட்ராத்மாஷி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள், தேசிய நிலையிலான  மகிழ் கற்றல் புத்தாக்கப் போட்டியில் (Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan SAMNOVA, 2022) தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். தனியாள் நிலை : (தங்கப் பதக்கம்) புத்தாக்கம்: MAFFT (ஆங்கிலப் பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர் :  திருமதி. கோகிலவாணி த/பெ ஜகநாதன் குழு நிலை : (வெள்ளிப்  பதக்கம்) புத்தாக்கம்: 3L Story (ஆங்கிலப் பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர்கள் :  திரு. சுரேந்திரன் த/பெ நாகரத்தினம், திருமதி. கோகிலவாணி த/பெ ஜகநாதன், குமாரி. திவ்யா த/பெ ராஜேந்திரன் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சுசிலா அவர்களின் வழிகாட்டலில் பள்ளியில்  மகிழ் கற்றல் நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்ட ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். மேலும் தங்களின் மகிழ் கற்றல் நடவடிக்கையைப் போட்டிக்கு அனுப்பி வெற்றியைப் ப

SJK(T) LADANG KAMPAR - SAMNOVA 2022 மகிழ் கற்றல் புத்தாக்கப் போட்டியில் ஆசிரியர்களின் சாதனை

Image
4 orang guru SJK(T) Ladang Kampar menang pingat perak & gangsa dalam Seminar Amalan PdPc Didik Hibur Peringkat Kebangsaan (SAMNOVA) 2022 தென்கிந்தா மாவட்டம், கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியர்கள், தேசிய நிலையிலான மகிழ் கற்றல்  புத்தாக்கப் போட்டியில் (Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan SAMNOVA, 2022)  பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். குழு நிலை : (வெள்ளிப் பதக்கம்) புத்தாக்கம் : Reading Wisdom Castle (நூலகப் பயன்பாட்டின் நனிச்சிறந்த அம்சம்) சாதனை ஆசிரியர்கள்: 1.திருமதி. நோர்நிஸா மைடின் 2. திருமதி. ரா.விசாலெட்சுமி தனியாள் நிலை:(வெண்கலப் பதக்கம்)  புத்தாக்கம் : Koordismart (கணிதப் பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர்: 3 .திருமதி. கி.சங்கீதா புத்தாக்கம் : KAD SIMBA 4 Dalam 1 ( தேசிய மொழி பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர்: 4. திருமதி.கோ.ஷாமினி தேவி தங்களின் சிறப்பான மகிழ் கற்றல் புத்தாக்கத்தின் மூலம் கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தும் இவ்வாசிரியர்களின் சீரிய பணிக்கு நனிச்சிறந்த

HARI GURU PERAK 2022 - தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் ஆசிரியர் திருமதி அர்வினா விருது பெற்றனர்

Image
பேரா மாநில நிலை ஆசிரியர் நாள் விழா கடந்த 19.05.2022ஆம் நாள், தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடந்த இவ்விழா பேரா மாநில முதல்வர் மாண்புமிகு டத்தோ சிறி சரானி முகமது தலைமையில் நடந்தேறியது. 2022ஆம் ஆண்டின் ஆசிரியர் நாள் விருதுகள் வழங்கி ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டனர். விருது பெற்ற ஆசிரியர்களுள் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரும் அடங்குவர். கோல கங்சார் மாவட்டம், டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் வீராசாமி "ஆசிரியர் நன்மதிப்பு விருது" (Pingat Penghormatan Guru) பெற்றார். மிகச் சிறப்பான நிருவாகத் திறனை வெளிப்படுத்தியதோடு பள்ளி உருமாற்றுத் திட்டங்களை மேற்கொண்டதன் அடிப்படையில் தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. PINGAT PENGHORMATAN GURU PN.RAJAMBAL A/P VEERASAMY GURU BESAR, SJK(T) LADANG DOVENBY தவிர, பாகான் டத்தோ மாவட்டம், ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 3 தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் திருமதி அர்வினா சுப்பிரமணியம் &