மாணவர் முழக்கம் 2021 - பேரா மாநிலத்தில் 24 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்

மாணவர் முழக்கம் 2021 காலிறுதி சுற்றுக்குப் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 24 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மலேசியாவில் மட்டுமல்லாது அனைத்துலக நிலையிலும் புகழ்பெற்ற பேச்சுப் போட்டியான மாணவர் முழக்கம் 2021 தகுதிச் சுற்று நடந்து முடிந்துள்ளது. இதில், அதிக எண்ணிக்கையில் பேரா மாநிலத்தின் மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. 10ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் மாணவர் முழக்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே பேச்சாற்றலை உருவாக்குவதில் தனி முத்திரைப் பதித்த ஒரு போட்டியாகும். வணக்கம் மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன் இப்போட்டி நடைபெறுகிறது. தகுதிச் சுற்றில் போட்டியாளர்கள் பேசி காணொலியாகப் பதிவுசெய்து போட்டிக்கு அனுப்பி வைத்தனர். அதிலிருந்து நடுவர் குழுவினர் சிறந்த 120 மாணவர்களைக் காலிறுதி சுற்றுக்குத் தெரிவுசெய்துள்ளனர். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 24 மாணவர்கள் மாணவர் முழக்கம் 2021 காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மாணவர் முழக்கம் 2021 காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள மாணவர்களின் விவரங்களைக் பின்வரும் அட...