மலேசியாவில் தமிழ்க்கல்வி 202ஆம் ஆண்டு நிறைவை அடைகிறது

(21 அக்டோபர் 1816-ஆம் ஆண்டில் பினாங்கு பிரீ ஸ்கூல் என்னும் பள்ளியில் மலேசியாவில் தொடங்கப்பட்ட தமிழ்க் கல்வி இன்றுடன் 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதனை முன்னிட்டு மலேசியத் தமிழ்க் கல்வி ஆர்வலரும், பேரா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளருமான சுப.நற்குணன் வழங்கும் சிறப்புக் கட்டுரை இது) 2018ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21அம் நாள், நம் மலேசியத் திருநாட்டில் தமிழ்க்கல்வி தொடக்கப்பட்டு 202 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 202 ஆண்டுகளாக இந்நாட்டில் தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தும் இடையறாது வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் வளர்ந்து கொண்டிருப்பதற்கும் தமிழ்க்கல்வியின் பங்களிப்பு மிக மிக உன்னதமானது; உயர்வானது; அளப்பரியது என்றால் மிகையாகாது. மலேசியாவில் 202 ஆண்டுகள் நிறைவை அடையும் தமிழ்க்கல்விக்கு மனமகிழ்ச்சியோடு மகுடம் சூட்டி மாண்புறச் செய்ய வேண்டியது மலேசியத் தமிழரின் கடமை; அதனால் மலேசியத் தமிழருக்குப் பெருமை. மேலும் படிக்க..