Posts
பேரா மாநிலத்தின் சிறந்த நூலகப் போட்டியில் 2 தமிழ்ப்பள்ளிகள் வெற்றி
- Get link
- X
- Other Apps
@சுப.சற்குணன்
புறவம்
-
2021ஆம் ஆண்டுக்கான பேரா மாநில நிலையில் சிறந்த 13 நூலகங்கள் அதிகாரப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில நிலையில் சிறந்த நூலகப் போட்டியில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளன. குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவுக்கான போட்டியில், லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தின் தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி இரண்டாம் பரிசை வென்றுள்ளது. இதே பிரிவில் மூன்றாம் பரிசினை பத்தாங் பாடாங் மாவட்டத்தின் பனோப்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றுள்ளது. மாநில நிலையில் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடியிருப்பது பாராட்டுக்குரிய செய்தியாகும். நமது தமிழ்ப்பள்ளிகளும் மற்ற பள்ளிகளுக்கு இணையாக மிகச் சிறப்பாக மிளிர்கின்றன என்பதற்கு இந்த வெற்றியானது நல்லதொரு சான்றாகும். பேரா மாநில நிலையில் குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவில் 2ஆம் பரிசினை வாகை சூடிய தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி நூலகத்தின் காட்சிகளைக் கீழே காணலாம். தலைமையாசிரியர் திருமதி ஐ.சந்தனமேரி நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி தா.மோகனவள்ளி பேரா மாநில நிலையில் குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவில் 3ஆம் பரிசினை வாகை சூடிய பனோப்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி நூலக...
விழி - மடல் 31 : நன்றே முடித்தோம் நமது பணி
- Get link
- X
- Other Apps
@சுப.சற்குணன்
புறவம்
-
SJK(T) TUN SAMBANTHAN, BIDOR - அப்துல் கலாம் இளம் சேவையாளர் விருது பெற்றார் ஆசிரியர் குமரன்
- Get link
- X
- Other Apps
@சுப.சற்குணன்
புறவம்
-
சாதனை ஆசிரியர் / Nama Guru: திரு . குமரன் காந்தியப்பன் EN.KUMARAN A/L GANDIAPPAN பள்ளிப் பெயர் / Nama Sekolah: துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி , பீடோர், பத்தாங் பாடாங் மாவட்டம் , பேரா SJKT TUN SAMBANTHAN,BIDOR, DAERAH BATANG PADANG, PERAK விருது / Nama Anugerah: டாக்டர் அப்துல் கலாம் இளம் சேவையாளர் விருது Dr. APJ Abdul Kalam Young Servant Award 2022 நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa நாள் / Tarikh: 23/01/2022 ஏற்பாட்டாளர் / Penganjur: அப்துல் கலாம் மக்கள் சேவை சங்கம் , புதுக்கோட்டை , தமிழ்நாடு Pudukottai District Ponnamaravathi Kamaraj Nagar Dr. APJ Abdul Kalam People Welfare Association. தலைமையாசிரியர் / Nama Guru Besar: திருமதி வாசுகி முணியாண்டி / PN VASAGI A/P G MUNIANDY
பேரா தமிழ்ப்பள்ளிகளில் அனைத்துலகத் தாய்மொழி நாள் விழா 2022
- Get link
- X
- Other Apps
@சுப.சற்குணன்
புறவம்
-
கடந்த பிப்ரவரி 21ஆம் திகதி அனைத்துலகத் தாய்மொழி நாள், பேரா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளில் எளிமையாக ஆனால் தமிழ்மொழி உணர்வோடு கொண்டாடப்பட்டது. கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக கல்வி அமைச்சு வழங்கியுள்ள தரச்செயல்முறை விதிகளுக்குக் கட்டுப்பட்டுத் தாய்மொழி நாள் விழா நடத்தப்பட்டது. தாய்மொழி நாள் விழா 2022 படங்களையும் காணொலிகளையும் கீழே காணலாம். புனித பிலோமினா தமிழ்ப்பள்ளி, ஈப்போ சங்காட் தமிழ்ப்பள்ளி, பத்து காஜா செயின்ட் தெரேசா தமிழ்ப்பள்ளி, தைப்பிங் மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி
SJK(T) MAHA GANESA VIDYASALAI - 2021 ஆம் ஆண்டின் செயல் திட்டங்களும் சாதனைக் கதைகளும்
- Get link
- X
- Other Apps
@சுப.சற்குணன்
புறவம்
-
மகா கணேசா வித்யாசாலை, மஞ்சோங் மாவட்டத்தில் மிகப் பெரிய தமிழ்ப் பள்ளியாகும். தொடர்ச்சியாகப் பல கல்வித் திட்டங்களும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளும் போட்டிகளும் சிறப்பாக இப்பள்ளியில் நடந்து வருகின்றன. மேலும், மாவட்டம், மாநிலம், தேசிய நிலை மட்டுமின்றி அனைத்துலக நிலையில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டத்தக்க வெற்றிகளை இப்பள்ளி மாணவர்கள் அடைந்துள்ளனர். கல்வி வளர்ச்சியோடு மாணவர் உருவாக்கத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படும் இப்பாள்ளியின் ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள். பள்ளிக்கு தலைமைப் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக வழிநடத்திவரும் தலைமையாசிரியர் திருமதி சு.கண்ணகி அவர்களுக்கும் நல்வாழ்த்துகள். தலைமையாசிரியர் திருமதி சு.கண்ணகி இப்பள்ளியின் வெற்றிக்கதைகளும் சாதனைகளும் மின்னூல் வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளதைக் கீழே காணலாம். Click To View Flipbook / படத்தைச் சொடுக்கவும் முடிந்த 2021ஆம் ஆண்டில் மகா கணேசா வித்யாசாலை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற செயல்நடவடிக்கைகள் கீழே உள்ள மின்னூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. Click To View Flipbook / படத்தைச் சொடுக்கவும்
SJK(T) KERUH - 2021ஆம் ஆண்டுத் திட்டங்களும் சாதனைக் கதைகளும்
- Get link
- X
- Other Apps
@சுப.சற்குணன்
புறவம்
-
பேரா மாநிலம், மேல்பேரா மாவட்டத்தில் அமைந்துள்ளது குரோ தமிழ்ப்பள்ளி, கல்வி, இணைப்பாடம், மாணவர் உருவாக்கம், ஆசிரியர் மேம்பாடு என இப்பள்ளி பல வகையிலும் சிறப்புக்குரிய ஒரு பள்ளியாகத் திகழ்கின்றது. Aktiviti & Pencapaian SJK(T) Keruh Tahun 2021 கொரோனா கோரணி நச்சில் பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த போதிலும் இயங்கலை வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகளும், செயல் நடவடிக்கைகளும் இப்பள்ளியில் நடைபெற்றுள்ளன. மாறுபட்ட கோணத்தில் மாணவர்களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள். தவிர, மாநில, தேசிய, அனைத்துலக நிலைகளில் இயங்கலை வாயிலாக நடந்த பல போட்டிகளில் கலந்துகொண்டு இப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் சிறந்த வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளனர். அதுமட்டுமல்லாது, குரோ தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் உயரிய விருதுகளை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்ந்துள்ளனர். இப்பள்ளியின் முதுகெலும்பாக இருந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் நன்முறையில் வழிநடத்தி வெற்றிகளைக் குவித்துவரும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி செல்வராணி அவர்கள் வெகுவாகப் பாராட்டலாம். தலைமைய...