SJK(T) MENGLEMBU - பசுமைத் திட்ட மேலாண்மை போட்டியில் 3 விருதுகள் வென்று ஆசிரியர்கள் சாதனை

பேரா, வட கிந்தா மாவட்டம், மகிழம்பூ தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் நடைப்பெற்ற 2020-ஆம் ஆண்டிற்கான பசுமைத் திட்ட மேலாண்மை போட்டியில் [ Malaysia GPM Sustainability Awards - School & STEM Curriculum 2020] மூன்று விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது. மகிழம்பூ தமிழ்ப்பள்ளி ஆசிரியர் குழுவினர் இப்போட்டியில் பங்கெடுத்து தங்களின் சிறப்பான படைப்புகளை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளனர். Kumpulan Guru SJK(T) Menglembu, Daerah Kinta Utara, Perak menang 3 Award dalam Pertandingan Malaysia GPM Sustainability Awards - School & STEM Curriculum 2020 peringkat kebangsaan. சஸ்னெட் [SustNET] எனப்படும் தனியார் நிறுவனம் நடத்திய இப்போட்டியில் பேரா மாநில அளவில் 25 பள்ளிக்கூடங்கள் பங்கெடுத்தன. அதில் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, மூன்று பிரிவுகளில் [ Innovator Eco Brick, 5R Herbal Garden Without Waste மற்றும் Solar Energy Light (SEL)] வெற்றிப் பெற்று விருதுகளை வென்றுள்ளது. கடந்த 30.11.2020 நடைபெற்ற இப்போட்டிக்கான மதிப்பபீடு கூகிள் தொடர்பு வழித்தடத்தில் இயங்கலை வாயிலாக ...