பேரா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, நேற்று ஜூன் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) மலேசிய அருள் ஒளி மன்றம், பேராக்கில் சிறப்பாக நடைபெற்றது. தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் உள்ளன. அதில் புதிர்ப்போட்டி மாநில நிலையில் நடத்தப்பட்டு, தேசிய நிலைக்கு மாணவர்கள் தேர்வு பெறுவர். தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் இருபரிமாண அசைவூட்ட போட்டி, வரைதல் போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி, & ஸ்கேரேட்ஸ் போட்டிகள் ஆகியவை நடைபெற்று மாநில நிலையில் மாணவர்கள் தேர்வு பெற்று, தேசிய நிலையிலான போட்டியில் மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறந்த படைப்பை வழங்குவர். மேலும் படிக்க..