பேரா மாநில நிலை மலாய்மொழி விழா 2018 (KARNIVAL BM)

கடந்த 28.07.2018ஆம் நாள் சித்தியவான் உக் இங் சீனப்பள்ளியில் பேரா மாநில நிலை மலாய்மொழி விழா 2018 வெகுச் சிறப்புடன் நடந்தது. மலாய்மொழி தனியாள் நாடகம் (TEATER SOLO) மற்றும் மலாய்மொழிப் புதிர் (KUIZ BAHASA MELAYU) ஆகிய இரண்டு போட்டிகளில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாநில நிலைக்குத் தேர்வுபெற்ற தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் பாராட்டுக்கு உரியவை. இதன் நிறைவு விழாவில் பேரா மாநில முதல்வர் மாண்புமிகு அஹ்மாட் பைசால் அசுமு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியதோடு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். மலாய்மொழி தனியாள் நாடகப் போட்டியில் இரண்டாம் நிலை வெற்றியாளராக தெலுக் இந்தான் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவி தாரணி தவக்குமார் வெற்றிபெற்றார். இதே போட்டியில் 3ஆம் நிலை வெற்றியாளராக பாகான் செராய் , ஜின்செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி சர்வினி முருகையா தேர்வுபெற்றார். நான்காம் நிலையில் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி மாணவி ஹர்மிதா கார்த்திகேயன் பரிசைத் தட்டிச் சென்றார். தமிழ்ப்பள்ளி மாணவர...