பேரா மாநிலக் கற்றல் புத்தாக்க விழா - KIPP 2021

பேரா மாநிலக் கற்றல் புத்தாக்க விழா 2021இல் நமது தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் கலந்துகொண்டது மிகவும் பெருமைக்குரிய செய்தி. கல்வி அதிகாரிகள், இடைநிலைப்பள்ளி, மலாய்பள்ளி, சீனப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 202 புத்தாக்கப் பங்கேற்புகள் இந்தப் போட்டிக்கு அனுப்பப்பட்டன. ஆசிரியர்கள் இந்தப் புத்தாக்கப் போட்டியில் தனிநபராகவும் குழுவாகவும் கலந்துகொண்டனர். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தப் புத்தாக்கப் போட்டியில் கலந்துகொண்டனர். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் 20 பேர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பான கற்றல் புத்தாக்கங்களை உருவாக்கி சாதனை ஆசிரியர்களாக மிளிரும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்; மனமார்ந்த நல்வாழ்த்துகள்! 📌ஆசிரியர்களின் பட்டியலையும் அவர்களின் கற்றல் புத்தாக்கம் & பதக்க விவரங்களையும் கீழே காண்க. [படத்தைச் சொடுக்...